Sunday , 6 July 2025

Arul

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் நேற்று ( 08 ) அறிவித்தது. இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதன்படி, முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

கச்சத்தீவை மீட்போம் – அண்ணாமலை சூளுரை

“கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் …

Read More »

பருத்தித்துறையில் வாள் வெட்டு

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார். புலோலி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

”அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது” தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

Read More »

பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பா.ம.க, தே.மு.தி.க.வுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி தலைமையை ஏற்கும் யாராக இருந்தாலும் வரவேற்போம் என்றார். மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

Read More »

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More »

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள் வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வேலூர் அரக்கோணம் திருவண்ணாமலை ஆரணி கள்ளக்குறிச்சி தருமபுரி சேலம் ஈரோடு தேனி நீலகிரி கோவை பொள்ளாச்சி பெரம்பலூர் தஞ்சை தூத்துக்குடி, தென்காசி, யிலும் திமுக போட்டி காங். போட்டியிடும் 10 தொகுதிகள் திருவள்ளூர் கடலூர் மயிலாடுதுறை சிவகங்கை …

Read More »

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இம்முறை பழைய வேட்பாளர்களுடன் புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற திருச்சி தொகுதி இம்முறை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட இருப்பதாக வைகோ அறிவித்தார். காங்கிரஸ், …

Read More »

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

மக்களவை

தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது: தமிழிசை ஆளுநர் பதவியில் எந்த ஒரு அழுத்தமும் கிடையாது; முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன்: தமிழிசை ஆளுநர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்த நிலையில் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்

Read More »