மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்றஞ்சாட்டினார். “ நாட்டை மீட்பதற்கு கடல்வளங்கள்போதும் என ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை விடுத்துவந்தனர். ஆனால் இந்த […]
Author: Arul
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 75 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 53 சதம். […]
மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலையின்மை – ஹரிணி அமரசூரிய
நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 […]
தங்க விலையில் மீண்டும் திடீர் ஏற்றம்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 […]
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தம்!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. […]
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!
அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது […]
கோர விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாப மரணம்!
மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மீராவோடை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவபீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் […]
சிம்புவின் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படமான ‘அரசன்’ திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அரசன்’ படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்குகிறார். இது வெற்றி பெற்ற ‘வடசென்னை’ திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு இதில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, விஜய் சேதுபதியின் […]
தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?
எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வருபவர் செங்கோட்டையன். கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தது மட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் யார் அடுத்த முதல்வர் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இருந்தது. கூவத்தூரில் சசிகலா தலைமையில் யார் அடுத்த முதல்வர் என ஆலோசித்தபோதும் அதில் செங்கோட்டையன் பெயர் இருந்தது. அந்த அளவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் வகித்து வந்தார் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி […]
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வர்ணனையா? – சாமர சம்பத்
பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும். ஆகவே, இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு […]





