பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறியது இவரா..? ரசிகர்களுக்கு ஷாக்..

இந்த வார பிக்பாஸ் எவிக்ஷனில் வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சட்டப்பேரவை போல, ஆளும் அணி, எதிர் அணி என 2 பிரிவுகள் ஜனநாயக அறைக்குள் அமர்ந்து விவாதம் நடத்துகின்றனர். இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனை பொறுத்தவரை, லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். ப்ளாக் பாண்டி உடல் நலக் குறைவு காரணமாக வீட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதன்முறையாக, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் சவின்யா தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சியில் இருந்து அனுப்பப்பட்டார். அதேபோல வெள்ளிக்கிழமை நடந்த எபிசோடில், வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு ஜாவித் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வார நாமினேஷனில் அஸ்மிதா, அவினாஷ், சாந்தினி, ஜேசன், குமரன், லஷ்மி பிரியா, மணிவண்ணன், பிருத்வி, வினோத் பாபு உள்ளனர். அவர்களை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களித்தனர், இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மணிவண்ணன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.