ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நேற்றைய தினம் தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொட பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கவே நடத்தப்படுவதாக ஜனாதிபதி கூறினார். இது என்ன முட்டாள்தனம்? நுகேகொடை பேரணியில் யாராவது போதைப்பொருட்களுக்கு ஆதரவாகப் பேசினார்களா? இந்த அரசாங்கம் பயந்துவிட்டது. ஒவ்வொரு போராட்டத்திலும் எதிர்க்கட்சிகளை போதைப்பொருள் ஆதரவாளர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. இப்போது மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. ஜனாதிபதி கூறிய பொய்களை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் மக்கள் இப்போது இந்த அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். ஜனாதிபதி கூறிய பொய்கள் நிறையவே உள்ளன. அவர் 14 மாதங்களாக பொய்களை மட்டுமே கூறி வருகிறார். நான் அவருக்கு இன்னும் 14 மாத அவகாசம் தருகிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி அவர் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர் கூறிய இந்தப் பொய்களுக்கு ஜனாதிபதி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.





