இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ […]
முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை…! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்…!
வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேசிய காவல்படை வீரர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில், சம்பவ இடத்தில், பலத்த காயங்களுடன் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
கோர விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாப மரணம்!
மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மீராவோடை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவபீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் […]
பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (நவம்பர் 24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் (Makumbura Multimodal Centre) இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த புதிய முயற்சியை டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. இந்த இலத்திரனியல் கட்டண […]
ரணில் வழக்கில் 50 பேரிடம் வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் தற்போதுள்ள காவல்துறை குழு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு ஊழியர்களிடமும் இந்த வாரம் […]
தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கைக்குச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டது. பசில் ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாக கடுமையான சந்தேகம் இருப்பதாக பிரதி பணிப்பாளர் நாயகம் லக்மினி கிரிஹகம நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களில் உள்ள […]
அனுர மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நேற்றைய தினம் தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொட பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் […]
அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ?
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இந்த விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார். “சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றேன். அங்கு […]





