Monday , July 23 2018
Breaking News
Home / Sri Lanka News

Sri Lanka News

கறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை

ஈழத்தமிழர்களின் வரலாற்றில்… 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து… தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் “கருப்பு ஜூலை’ என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த “கருப்பு ஜூலை’ நிகழ்ந்து தற்போது 35வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. …

Read More »

மட்டக்களப்பு குடும்பி மலையும் பறிபோகின்றது?

மஹிந்த அரசு சம்பூரை இந்தியாவிற்கு தாரை வார்த்திருந்த கதை கடந்து தமிழபேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கரும்புச் செய்கைக்காக இந்தக் காணியை வழங்கவுள்ளதாக இலங்கைப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச …

Read More »

ஏறாவூர் அரிசி ஆலைகளால் ஐயன்கேணி தமிழ்கிராமமே இடம்பெயரும் நிலை!

ஏறாவூர் நகரில் 10க்கு மேற்பட்ட அரிசி ஆலைகளும் அதனால் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து அரிசி ஆலை முஸ்லிம் வியாபரிகளின் வாழ்க்கையோ சுகபோகத்தில் செல்கின்றது. ஆனால் இந்த அரிசிஆலையால் ஏற்படும் பாதிப்புகளால் சுற்றியுள்ள ஐயன்கேணி தமிழ் மக்களும் மிச்சல்நகர் முஸ்லிம் மக்களும் சொல்லொன்னா துயரங்களை ஆபத்துகளை அனுபவிக்கின்றார்கள். காலையில் விடிந்து எழும்புவதற்குள் வீட்டுப்பாவனைப்பொருட்கள் அத்தனையும் புழுதி படலத்தால் மூடப்படுகின்றது. அத்தோடு வீட்டில் நிம்மதியாக சிறுவர் தொடக்கம் முதியவர் வரை உறங்க முடியாமல் …

Read More »

செம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்!!

யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் மண்­ணில் புதைக்­கப்­பட்­டி­ ருந்த நிலை­யில் மனித மண்டை ஓடு உள்­ளிட்ட மனித எச்­சங்­கள் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன. 1998 இல் யாழ்ப்­பா­ணத்­தில் காணா­மற்­போன நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் மற்­றும் இளம் பெண்­கள் கொல்­லப்­பட்டு செம்­ம­ணி­யி­லேயே புதைக்­கப்­பட்­டார் கள் என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது. இது தொடர்­பாக நடந்த வழக்­கில் செம்­ம­ணி­யின் பல இடங்­க­ளி­லும் தோண்டி 15 மனித உடல்­க­ளின் எச்­சங்­கள் முழு­மை­யான எலும்­புக்­கூ­டு­க­ளா­க­வும் எச்சங்­க­ளா­க­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இந்­தப் பின்­ன­ணி­யில் நேற்­றும் …

Read More »

திக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா!!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா அண்மையில் இடம்பெற்றது.

Read More »

வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை …

Read More »

சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு …

Read More »

மீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு!

விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய கட்டுரையினை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த ஊடகவியலாளரை இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 24 ஆம் திகதி விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பில் சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். குறித்த கட்டுரை தொடர்பில் பயங்கரவாத …

Read More »

மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மற்றும் இன்று புதன் …

Read More »

இலங்கையில் தூக்கில் ஏற்றப்படவுள்ள தமிழர்கள் யார் தெரியுமா?

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, 18 குற்றவாளிகளின் பெயர்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை …

Read More »