Home / Sri Lanka News (page 3)

Sri Lanka News

தமிழரசுக் கட்சியை புனரமைக்க நடவடிக்கை!

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் …

Read More »

எமது ஆட்சியில் ஆட்களை கடத்தினோம் – பசில்

தேசிய பாதுகாப்பு என்று கூறி தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது என தெரிவித்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ரத்துபஸ்வெல சம்பவம் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. …

Read More »

உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மிகவும் வறிய நிலையிலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை தூக்கி போராடியவரலாறு வடகிழக்கில் உள்ளது. தமது குடும்பத்தின் நிலமையினையும் கருத்தில் கொள்ளாமல் களத்தில் நின்று போராடியபோதும் அவர்களின் குடும்பத்தின் …

Read More »

காதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்

தமது காதலுக்கு தமது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியொன்று ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பமொன்று காலி ஹபராதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகங்கம பகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் , ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவருமே இவ்வாறாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். உயிரிழந்த 54 வயதுடைய நபர் முச்சக்கர வண்டி சாரதி என்பதுடன் அவரின் பிள்ளைகளும் திருமணம் முடித்துள்ளனர். …

Read More »

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா! (Photo,Video)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் சிவபூசைக் கைலைக் காட்சியும், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கைலைக் …

Read More »

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி!

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி …

Read More »

அதீத காற்று காரணமாக மன்னாரில் புழுதி புயல்

மன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது மன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானத அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது. மறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள …

Read More »

“உன்னைத் தூக்குவோம்” – நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல …

Read More »

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே இன்று இரவு பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உரும்பிராயை சேர்ந்த இவர் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார். இதன்போது இச் சிறுவனது தாயார் இறந்த நிலையில் தந்தை வேறொரு திருமணத்தை செய்திருந்தார். இந்நிலையில் தந்தையும் தந்தையின் இரண்டாம் மனைவியுமாக …

Read More »

இலங்கையி..ல் சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு திட்டம்..

சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். பிரதான ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் தற்போதைய அரசாங்கத்தின் குழறுபடிகளை சமூக வலைத்தளங்கள் ஊடாகவே அம்பலப்படுத்தி வருவதாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச …

Read More »
error: Content is protected !!