Tuesday , December 18 2018
Home / Sri Lanka News (page 4)

Sri Lanka News

Sri lanka News

மஹிந்த – ரணில் சந்திப்பு ?

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. Share3TweetSharePin+13 Shares

Read More »

மாற்றத்திற்கு வாய்ப்புண்டு : குமார வெல்கம

“இன்று வெள்ளிக்கிழமை… மாற்றங்கள் வரலாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று காலை ஊடகவியலாளர்கள் குமார வெல்கமவிடம் இன்று வெள்ளிக்கிழமை அதனால் அதிர்ச்சி விடயங்கள் எதுவும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கே குமார வெல்கம மேற்கண்டவாறு ஒற்றை வரி பதிலை அளித்துள்ளார். Share2TweetSharePin+12 Shares

Read More »

அமர்வை புறக்கணித்த அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை …

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை:மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான …

Read More »

ஐக்கிய தேசிய கட்சியினர் என்னை அச்சுறுத்தின: கருணா

ஐக்கிய தேசிய கட்சியினர் தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவரது டுவிட்டர் பதிவில், சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்னை பயமுறுத்துகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பலர் என்னிடம் பேசுவதற்காக குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளனர். என்னை பற்றி அறிய வேண்டும் என்றால் மட்டக்களப்பு மக்களிடம் கேழுங்கள்.2004 ஆம் ஆண்டிற்கு …

Read More »

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!!

நிந்தவூர் 01ம் பிரிவைச் சேர்ந்த மன்சூர் அப்துல்லாஹ் (தரம் 8 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தவர்) எனும் பாடசாலை சிறுவன் ஒருவர் இன்று மாலை 04 மணியளவில் காணாமல் போயுள்ளார். மேலும் அவர் இறுதியாக நீல நிற சட்டை (சேட்) மற்றும் சாம்பல் நிற காற்சட்டை (ட்ரௌசர்) அணிந்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் பகிரப்பட்டு வந்தது. இவரைக் கண்டவர்கள் உடன் 0774826453 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி அறியத்தரவும் …

Read More »

மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்…!!

High Court

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புதிய ஆயம் ஒன்றை பிரதம நீதியரசர் நளின் பெரேரா நியமித்துள்ளார். தான் உட்பட உயர் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயம் ஒன்றினையே பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதன்படி இந்த ஆயம் ஒன்றுகூடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதுகுறித்த இறுதித் தீர்மானத்தை வழங்கும் …

Read More »

ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை! மைத்திரி திட்டவட்டம்

“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டேன்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தனிநபருடனான முரண்பாடு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இது கொள்கை ரீதியான …

Read More »

பிரேரணை மூலம் என்னை விரட்டியடித்துக் காட்டுங்கள்!

“நாடாளுமன்றத்தில் நான் கட்சி சார்பாகச் செயற்படவில்லை. நடுநிலையுடன் செயற்படுகின்றேன். என் மீது அதிருப்தி இருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து வன்முறை மூலம் என்னைத் துரத்தியடிக்க முற்பட வேண்டாம். இந்த வன்முறைகளுக்கெல்லாம் பயந்தவன் நான் அல்லன். சபையின் கெளரவத்தை – நாட்டின் நன்மதிப்பைக் கருதியே வன்முறையைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – இவ்வாறு நாடாளுமன்றக் குழு அறையில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற கட்சித் …

Read More »

தில் இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்!

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால்தான் அவர்களின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பு நடத்துவதை ஒவ்வொரு முறையும் குழப்பி வருகின்றார்கள். எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் …

Read More »