இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! – தமிழரசுக் கட்சி

“பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் […]

2026 பாதீடு ஏமாற்றமா? விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். பாதீடு தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டை […]

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை […]

ஜனாதிபதி

குற்றவாளிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம் – ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஓர் அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பிற்பகல் தங்காலை பொது […]