காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றினார். மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், அவர் பின்வரும் முக்கிய உறுதிமொழிகளை அளித்தார்: மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வழிவகை செய்யப்படும். குடும்பத்தில் வீட்டிற்கு ஒரு […]
Other News
பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (நவம்பர் 24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் (Makumbura Multimodal Centre) இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த புதிய முயற்சியை டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. இந்த இலத்திரனியல் கட்டண […]
ரணில் வழக்கில் 50 பேரிடம் வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் தற்போதுள்ள காவல்துறை குழு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு ஊழியர்களிடமும் இந்த வாரம் […]
2026 பாதீடு ஏமாற்றமா? விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். பாதீடு தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டை […]
வொஷிங்டன் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் […]
மீண்டும் மக்கள் சந்திப்பு – தவெக தலைவர் எடுத்த புதிய முடிவு
தவெக. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். அந்த சம்பவத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார். தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை நடத்திய அவர், இந்த […]
தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கைக்குச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டது. பசில் ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாக கடுமையான சந்தேகம் இருப்பதாக பிரதி பணிப்பாளர் நாயகம் லக்மினி கிரிஹகம நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களில் உள்ள […]
அனுர மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நேற்றைய தினம் தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொட பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் […]
3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தமாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 125,000 பவுண்ட்ஸ்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனைகளில் வேலைவாய்ப்பு […]
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்
ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் […]





