அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய்யுடனான இந்த சந்திப்பு தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சியில் இணைவதற்கு முன் தனக்கு வழங்கப்படும் பதவி குறித்து […]
Other News
அன்று மீனவர்களை கொன்றவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு – ரத்ன கமகே
“ ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இவற்றை மறந்து தற்போது மீன்பிடித்துறை பற்றி கதைக்கின்றனர்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பிரதி அமைச்சர் ரத்ன […]
ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி
ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக […]
“களம்காவல்” படத்தின் புதிய அப்டேட்…
நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். இதனை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. […]
பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!
ஹொரவ்பொத்தானை -றத்மலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான எச். சமீனா (36 வயது) எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது, கனவல்பொல- ஊத்துப்பிட்டி என்ற இடத்திற்கு தனது கணவரின் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்ற […]
பிரபாகரன் உலகத் தலைவர் – கஜேந்திரகுமார்
“ ஈழத் தமிழர்களினது மட்டும் அல்ல, உலகத் தமிழர்களினதும் தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ தேசியத் தலைவர் அவர்களுடைய போராட்டத்தை 2009 இற்கு முதலும் அதற்கு பிறகும் மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புகளில் […]
Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல்
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வைட்ஹாலில் (Whitehall) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மெட் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர்களை அந்தப் பகுதிக்குள் செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள குடும்ப பண்ணை வரிக்கு (‘family farm tax’) எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்ட அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளதுடன், […]
கருவாடு, மாசி இறக்குமதி அதிகரிப்பு – நாமல்
மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்றஞ்சாட்டினார். “ நாட்டை மீட்பதற்கு கடல்வளங்கள்போதும் என ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை விடுத்துவந்தனர். ஆனால் இந்த […]
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 75 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 53 சதம். […]
மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலையின்மை – ஹரிணி அமரசூரிய
நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 […]





