பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!

பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!

ஹொரவ்பொத்தானை -றத்மலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான எச். சமீனா (36 வயது) எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவது, கனவல்பொல- ஊத்துப்பிட்டி என்ற இடத்திற்கு தனது கணவரின் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்ற போது குறித்த வீட்டுக்கு பின்னால் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் மரதன்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் றத்மலை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் உறவினரொருவர் தெரிவித்தார்.