அதிமுக எனும் ஆலமரத்தைச் சாய்க்க நினைப்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
மேலும், 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் என்றும், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தியுள்ளது என்றும் தவெக அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.





