மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இரெ. இடும்பையன் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 30) காலமானார்.
அவரது இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து, கண்ணீர்விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
