நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் நகர்ந்தபோது அதன் பின்பகுதியில் நின்றிருந்த ஹர்ஷவர்தன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
