இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (09) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2,000 அதிகரித்து 378,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.