பிக்பாஸ் சீசன் 10 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார எவிக்ஷன் குறித்து சர்ப்ரைஸ் அறிவிப்பை இன்று விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 5 வாரத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை, ஆனந்தி, பிளாக் பாண்டி, மணிவண்ணன், சவின்யா, ஜாவித், குமரன் தங்கராஜன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்டு கார்டில் டிடிஎஃப் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா ஆகிய மூன்று பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.
5வது வாரத்திற்கான நாமினேஷனில், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டது. அந்த அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு முனியம்மாள், லட்சுமி பிரியா, ஜேசன், ஷமா, அன்சர், சாந்தினி, அஸ்மிதா ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இந்த பட்டியலில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த வாரம் No Eviction அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேறவில்லை என கூறி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும்.
