48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு உயர்ஸ்தானிகராலயங்களின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை “உயர் விழிப்பு நிலையில்” வைத்துள்ளது. …
Read More »மின் தடைக்கான காரணம் வௌியானது
மின் தடைக்கான காரணம் வௌியானது சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடைக்கு வழிவகுத்துள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மின் தடைக்கான அறிக்கையை சமர்ப்பித்து அந்த குழு இதனை வௌிப்படுத்தியுள்ளது. இந்த குழுவின் முழு அறிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெற்றக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Read More »இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் – நாமல்
இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் – நாமல் இந்தியாவுடன் இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடி மறைப்பதற்கு இடமளிக்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சிலாபம் பகுதியில் புதன்கிழமை (23) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 159 பெரும்பான்மை பலம் உள்ளது என்பதால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு …
Read More »வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும், நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News
Read More »இன்றைய ராசிப்பலன் – 24.04.2025
இன்றைய ராசிப்பலன் – 24.04.2025 இன்றைய பஞ்சாங்கம் 24-04-2025, சித்திரை 11, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.32 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 10.49 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது – நளிந்த ஜயதிஸ்ஸ !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு …
Read More »ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது- செல்வம் அடைக்கலநாதன் !
ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி …
Read More »பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு
சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். அப்பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றை சோதனை செய்த பின்னர் , சிறுவன் நீரில் மூழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவன் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »டேன் பிரியசாத் கொலை – மூவர் சந்தேகத்தின் பேரில் கைது
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More »