அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை ஊடாக மசகு எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதை ஈரான் அனுமதிக்கும் விதம் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான முறையில் செயல்படுகிறது. சிலர் இதனை ‘கௌரவமற்ற செயல்’ என்று கூடச் சொல்வார்கள்,” என ட்ரம்ப் சாடியுள்ளார். “இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” என்றும் அவர் ஆவேசமாகத் குறிப்பிட்டுள்ளார். […]
Author: Arul
இணையத்தில் கசிந்த ஜனநாயகன்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’, இணையதள கசிவு (Leak) காரணமாகப் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சென்சார் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கடந்த ஜனவரி மாதம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சியும் […]
போர் நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி எரிபொருள், எரிவாயுக்களின் விலைகளைக் குறையுங்கள்! – சபையில் சஜித்
மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலை ஒரு வாய்ப்பாகக் கருதி, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் […]
ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கும் நாடுகளுக்கு 50% வரி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், எந்தவித விதிவிலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். இதனுடன், ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் அமெரிக்கா, […]
போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப்
இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். […]
லெபனான்மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினாலும், ஈரான் ஒருபோதும் அணுசக்தி அல்லது ஏவுகணை அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: புத்தகம் எழுதி உண்மையை மூடிமறைக்க முடியாது!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புத்தகங்களை எழுதினாலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது. மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்றுவரும் சமயங்களில் எல்லாம் கம்மன்பில கலக்கமடைகின்றார். எனவே, பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்பது […]
உலக அமைதிக்கு வித்திடுகிறதா அமெரிக்கா?
உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் இந்த மாற்றத்தை விரும்புகின்றது, அவர்களும் ஏனையோரும் தொடர்ச்சியான மோதல்களினால் சோர்வடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைச் சீர்செய்ய அமெரிக்கா உதவும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் […]
இரு வார கால போர்நிறுத்தம்: பிராந்திய அமைதிக்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் விரிவான அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரைப் […]
திமுகவின் ஆட்சியில் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் – அண்ணாமலை
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் முறையாகத் தயாரித்துக் கொடுக்கவில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதன் பொருள் என்னவெனில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை […]





