கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் எக்கால பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Read More »யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம்
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் இன்று கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், எம்.சி.ஏ கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More »இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல்!
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தொற்றுப் பரவலினால் அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இந்திய சுகாதாரத்துறை பொதுமக்களை …
Read More »ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!
ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது. ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பைப் பதிவிட்ட பின்னர், …
Read More »இளம் குடும்பப் பெண்ணின் உயிரிழப்பில் மர்மம் – தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தாவடி தெற்கு, காளி கோவில் வீதியில் வசிக்கும் 31 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவரும், மகளும் பிரான்சில் வசிப்பதாகவும் குறித்த பெண் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி இரவு உணவருந்தி விட்டு உறங்கச் சென்றிருந்த நிலையில் மறுநாள் அவர் எழுந்திருக்கவில்லை என காவல்துறையினரின் …
Read More »பிரான்சுக்கு வருகை தரும் சாள்ஸ் மன்னர்.!
Normandy தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவுநாளைக் கொண்டாடுவதற்கு பிரித்தானிய மன்னர் சாள்ஸ் பிரான்சுக்கு வருகை தர உள்ளார். ஜூன் 6 ஆம் திகதி அவர் Normandy இற்கு வருகை தர உள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாள்ஸ் மன்னர், ஏப்ரல் 30 ஆம் திகதி மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொள்ளுவது இதுவே முதன்முறையாகும். அவருடன் அரசியாரும் உடன் வருகை தர உள்ளார். இத்தகவல்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றில் …
Read More »டயனா கமகேவிடம் CID யினர் வாக்குமூலம் பதிவு!
உயர்நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இலங்கையில் அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் வேறு ஆவணங்கள் தொடர்பிலும் இதன்போது டயனா கமகேவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
Read More »முன்னாள் இராணுவத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியும், பொறியியலாளருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விஷேட படையணியின் கேர்னலாகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 19ஆம் திகதி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குறித்த செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பிலும் …
Read More »விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகியோர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான …
Read More »