சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம், அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை துல்லியமான எண்ணிக்கையாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துல்ஹிரியாவில் சுமார் 21 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்தும் இதே போன்ற […]
Author: Arul
உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் […]
யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மழைக்காலம் என்பதால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், காய்ச்சல் போன்ற […]
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியிருந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கொடூரம்! மனைவியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்
தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்ற கணவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூருக்கு சென்றுள்ள பாலமுருகன் மனைவி ஸ்ரீபிரியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். […]
மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்
நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது […]
தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது – பிமல் ரத்நாயக்க
வரலாற்றில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபவமும் எங்களுக்கு உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது. எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் […]
ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது – கஜேந்திரகுமார்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை […]
அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது – சாணக்கியன்
மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் […]
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) உடல்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். “பல ஆண்டுகளாக வங்காளதேசத்தின் பொது வாழ்வில் பங்களித்த பேகம் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்” என்று மோடி Xல் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடைய எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகள் […]





