மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சல் தனது சகோதரர்கள் மூலம் சாக்ஷமை சந்தித்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களது காதல் […]
Author: Arul
சிவகங்கையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
சிவகங்கையில் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றுள்ளது. எதிர்முனையில், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில், இன்று மாலை 4.20 மணிக்கு, இரு பேருந்துகளும் நேருக்கு, நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பெண்கள் மற்றும் […]
சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை […]
கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]
10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ […]
மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி
நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: […]
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், […]
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் […]
கலிபோர்னியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த துயரம்!
கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் ஒருவரை […]
மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு!
திருகோணமலை, மாவிலாறு அணைக்கட்டில் நீர் மேவியதால் ஏற்பட்ட அந்தப் பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்ட 211 பேர் இலங்கை விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு இன்று மதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அந்தப் பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.





