நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது […]
Author: Arul
தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது – பிமல் ரத்நாயக்க
வரலாற்றில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபவமும் எங்களுக்கு உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது. எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் […]
ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது – கஜேந்திரகுமார்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை […]
அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது – சாணக்கியன்
மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் […]
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) உடல்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். “பல ஆண்டுகளாக வங்காளதேசத்தின் பொது வாழ்வில் பங்களித்த பேகம் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்” என்று மோடி Xல் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடைய எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகள் […]
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்
கிழக்கு உக்ரைன்(eastern Ukraine) நகரமான டினிப்ரோவில்(Dnipro) ரஷ்யா(Russia) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நாற்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன” என்று டினிப்ரோ பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கெய்வனென்கோ(Vladyslav Gaivanenko) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க […]
சாதி ஆணவக் கொலையால் பலியான காதலன்: சடலத்தை மணந்த காதலி!
மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சல் தனது சகோதரர்கள் மூலம் சாக்ஷமை சந்தித்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களது காதல் […]
சிவகங்கையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
சிவகங்கையில் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றுள்ளது. எதிர்முனையில், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில், இன்று மாலை 4.20 மணிக்கு, இரு பேருந்துகளும் நேருக்கு, நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பெண்கள் மற்றும் […]
சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை […]
கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]





