யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மழைக்காலம் என்பதால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், காய்ச்சல் போன்ற […]
இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியிருந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது – பிமல் ரத்நாயக்க
வரலாற்றில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபவமும் எங்களுக்கு உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது. எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் […]
ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது – கஜேந்திரகுமார்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை […]
அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது – சாணக்கியன்
மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் […]
சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை […]
கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் […]
மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி
நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: […]
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், […]
மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு!
திருகோணமலை, மாவிலாறு அணைக்கட்டில் நீர் மேவியதால் ஏற்பட்ட அந்தப் பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்ட 211 பேர் இலங்கை விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு இன்று மதியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அந்தப் பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் இலங்கை விமானப் படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.





