நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு நாட்களுக்கு இடம்பெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்தார். மேலும், புதிய பரீட்சைத் […]
இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
அன்று மீனவர்களை கொன்றவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு – ரத்ன கமகே
“ ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இவற்றை மறந்து தற்போது மீன்பிடித்துறை பற்றி கதைக்கின்றனர்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பிரதி அமைச்சர் ரத்ன […]
பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!
ஹொரவ்பொத்தானை -றத்மலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான எச். சமீனா (36 வயது) எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது, கனவல்பொல- ஊத்துப்பிட்டி என்ற இடத்திற்கு தனது கணவரின் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்ற […]
பிரபாகரன் உலகத் தலைவர் – கஜேந்திரகுமார்
“ ஈழத் தமிழர்களினது மட்டும் அல்ல, உலகத் தமிழர்களினதும் தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ தேசியத் தலைவர் அவர்களுடைய போராட்டத்தை 2009 இற்கு முதலும் அதற்கு பிறகும் மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புகளில் […]
கருவாடு, மாசி இறக்குமதி அதிகரிப்பு – நாமல்
மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்றஞ்சாட்டினார். “ நாட்டை மீட்பதற்கு கடல்வளங்கள்போதும் என ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை விடுத்துவந்தனர். ஆனால் இந்த […]
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 75 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 53 சதம். […]
மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலையின்மை – ஹரிணி அமரசூரிய
நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 […]
தங்க விலையில் மீண்டும் திடீர் ஏற்றம்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 […]
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தம்!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. […]
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!
அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது […]





