விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 26) கலந்தாய்வு நடத்தினார்.
அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில், குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஆளில்லா விமான அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
