கோவை இருகூர் அருகே 13 வயதுச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதைப் பதைபதைக்க வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் உளவியல் மாற்றங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கல்வியோடு அன்பையும் பொறுமையையும் மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்றும், வருங்காலமான குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.





