இணையதளத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது கடந்த ஏப்.3-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
