“நான் கேட்டிருந்தால், விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே 31) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ‘நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி தேமுதிக கிடையாது’ என்றார்.
