பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எக்ஸ் தள பதிவு ஒன்றை இட்டு முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
“இதுதான் உங்களது “நாகரிக அரசியலா” முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்?
ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள்.

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்கு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது. செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.