முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.
அந்த பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்றும் அவர்கள் மாநில அரசின் சேவை மற்றும் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
