திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமா ரோஸ், வெற்றி பெற்று ஒரு மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சொந்த தொகுதிக்கு வரவில்லை என கட்சியினர் குமுறுகின்றனர்.
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும் ஆன இவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னை சென்று எஸ்.பி.வேலுமணி அணியில் செயல்பட்டதாகவும், பின்னர் அந்த அணி எடப்பாடி அணியுடன் இணைந்த பிறகும் தொகுதிக்கு வராமல் கோவைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
