அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு

தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியல் துறவறம் (ஓய்வு) மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். இனி பாமக கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இனி என்னைப் பார்க்க வருபவர்கள் அரசியல் பேசாமல் நலம் விசாரித்தால் மட்டும் போதும்” என்றும் அவர் கூறியுள்ளார்.