தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரீடிங்கில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மறு கணக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மின்கட்டண உயர்வு குறித்த புகார்கள் அடிப்படையற்றவை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
