Arul

அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தைப் பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப்பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாகத் துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வோர் …

Read More »

லொஹான் ரத்வத்த கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More »

ரஜினி வராததால் விஜய்யை வைத்து பாஜக கட்சி தொடங்கியுள்ளது: அப்பாவு

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும்போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும்போது தான் உண்மையாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக …

Read More »

மக்களால் தீர்மானிக்கப்படும் நாட்டின் எதிர்காலம் – பிரதமர்!

மக்களின் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புவக்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மக்களால் தீர்மானிக்கப்படும். இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் தேவையான மாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. எங்களிடம் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே …

Read More »

டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா

மிச்சேல் ஒபாமா

டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;- “இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து …

Read More »

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. இதில் டாக்டர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். பெலீங்கி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதில் இருந்த 4 பேரும் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து …

Read More »

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி

விஜய்

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- “திமுக ஒரு ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடி படும்; யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு.. வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறினார் விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா

Read More »

விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா

எச்.ராஜா

விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். …

Read More »

மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – பிரதமர்

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு தொடர்பான போட்டி இல்லாத போதிலும், மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொத்தட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அருமை புரியாதவர்களே கடந்த காலங்களில் அதனைக் குறைத்து மதிப்பிட்டுவந்தனர், நாடாளுமன்றத்துக்கு எவரும் பலவந்தமாகச் செல்லவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஊழல்வாதிகளை மக்களே புள்ளடியிட்டு அனுப்புகின்றனர். நாம் விருப்பு வாக்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என எமது எதிர் தரப்பினர் கூறி …

Read More »