தங்க நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன் பெரும்பாலான மக்கள் “கனவை” எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் படங்கள் என்று விவரிப்பார்கள். அனைவரும் இரவில் பலமுறை கனவு காண்போம், சிலர் பகல் நேர தூக்கங்களில் கூட கனவு காண்பார்கள். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது என்பது கடினம் தான். நாம் கண்ட கனவை முழுமையாக அடுத்தவர்களிடம் சொல்ல முடியாது, ஏனென்றால் அதனை மறந்து விடுவோம். கனவுகள் விசித்திரமானவையாகவோ, தெளிவானவையாகவோ, அர்த்தமற்றவையாகவோ இருக்க கூடும். கனவுகள் குறித்த அறிவியல் ஒருமித்த கருத்து ஏதும் …
Read More »உலக வங்கியின் தலைவர் இலங்கை விஜயம்
உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அஜே பங்கா நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 20 ஆண்டுகளின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என …
Read More »கைக்கு அடங்காமல் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மல்லிகை பூ எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். மல்லிகைப்பூ – 1 கப் தேங்காய் எண்ணெய் – 1 கப் தயாரிக்கும் முறை முதலில் மல்லிகைப்பூக்களை நன்றாக கழுவி, உலர வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். பின் இந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பிறகு, ஒரு ஜாடியில் மல்லிகைப்பூக்களை போட்டு, …
Read More »வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வங்கி விடுமுறை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை வங்கி சேவை சங்கம் வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் காரணத்தால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணி நேரம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. …
Read More »எலான் மஸ்க்கை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி…
பொதுவாக உலகின் மிகப் பெரிய பணக்காரர்களைப் பற்றி மக்கள் பேசும்போது, எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்களை வழக்கமாக குறிப்பிடுவோம். ஆனால், இந்த வருடம் அவர்களை விட அதிகமாக சம்பாதித்த ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லாரிபிளாக்ராக் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும், இது டிரில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளைக் கையாளுகிறது. 1988ல் நிறுவப்பட்ட BlackRock நிறுவனத்தின் குறிக்கோள், எதிர்காலம் கருதி தங்கள் பணத்தை வளர்க்க …
Read More »நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More »உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
Read More »கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ விஜயகுமாரதுங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மதியம் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் மதியம் 12 மணிவரையிலான நிலவரப்படி , அனுராதபுரம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் , பொலன்னறுவை மாவட்டத்தில் 34 சதவீத வாக்குகளும், திருக்கோணமலை மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 35 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் …
Read More »