Sunday , 6 July 2025

Arul

இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?(30-04-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (30-04-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 994,670.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,090.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 280,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,170.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 257,350.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இலங்கை ரெப் பாடகர்

இலங்கையைச் சேர்ந்த ரெப் பாடகர் வாகீஷன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் பாடிய ரெப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ரெப் பாடகர் வாகீஷன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீஷன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, நடிகர் சார்லி , மற்றும் செண்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், …

Read More »

புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது NPP அரசாங்கம் – சஜித்

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.05.2025 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.05.2025 | Sri Lanka Tamil News ”இந்தியா உடனடியாக தாக்குதல் நடத்தும்; அதனால்..” – பாகிஸ்தான் அமைச்சர்

Read More »

”இந்தியா உடனடியாக தாக்குதல் நடத்தும்; அதனால்..” – பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியா

”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. …

Read More »

அனைத்து விமானங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்!

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் …

Read More »

“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” – டொனால்டு ட்ரம்ப் கலகல பேச்சு!

“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்தன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் …

Read More »

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு

”மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும்” என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதை வரவேற்றுள்ளபோதிலும், இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளன. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ”இது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது …

Read More »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக வாகனத்தை மீள கையளிக்க காலக்கெடு !

முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 2 வாகனங்களுக்கும் மேலதிகமான அரசாங்க வாகனங்களை மீள கையளிப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனாதிபதி செயலகத்தால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தலா 3 வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் 2 அரசாங்க வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, மீதமுள்ள வாகனத்தை திருப்பித் தருமாறு ஜனாதிபதி செயலகம் மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. அதன்படி, இதுவரை ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு சலுகைக் காலம் வழங்க ஜனாதிபதி செயலகம் …

Read More »

முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி அநுர !

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ வாகன இறக்குமதி தடையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை முன்னாள் அமைச்சர்கள் மூவர், தவறாகப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை …

Read More »