Sunday , 6 July 2025

Arul

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அத்துடன், நேற்று (28) மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இறுதியாக இன்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அஞ்சல்மூல வாக்களிப்புக்காக …

Read More »

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஜனாதிபதி மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது – இரா. சாணக்கியன்

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட 30,000 பேர் வருகை

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட 30,000க்கும் மேற்பட்டோர் ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்திற்கு வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவர் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் நேற்று (27) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அவரது தேகம் ரோமில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்தில் பளிங்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

Read More »

“3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார். பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி …

Read More »

எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் …

Read More »

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை

விஜய்

விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், Work from home-லிருந்து work from field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி என தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்

Read More »

எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்

உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்

“எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்” – ரஷ்ய அதிபர் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப்பின் சிறப்புத் தூதராக வந்த விட்காஃபிடம் புதின் பேச்சு நடத்தியபோது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே உக்ரைனில் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் தொடுத்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். …

Read More »

வயசு குறைந்த இளம் நடிகரை திருமணம் செய்ய துடிக்கும் மீன் நடிகை!

திருமணம்

வயசு குறைந்த இளம் நடிகரை திருமணம் செய்ய துடிக்கும் மீன் நடிகை! தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த ‘மீன்’ நடிகை. அழகும், நடிப்புத் திறமையும் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தற்போது மீண்டும் கிசுகிசுக்களின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறார். காரணம்? தன்னைவிட 12 வயது குறைந்த இளம் நடிகருடனான காதல், வெளிநாட்டு சுற்றுலாக்கள், மற்றும் வரவிருக்கும் திருமண வதந்திகள்! ஆனால், இந்தக் காதல் பயணம் அவ்வளவு எளிதாக இருக்குமா? வாருங்கள், இந்த சினிமா கிசுகிசுவை அலசுவோம்! …

Read More »