தவெகவை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார் – சி.வி.சண்முகம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது தவெக கூட்டணி அமைக்க அவர்கள் தயாராக இருந்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை உதாசீனப்படுத்தி நிராகரித்தார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி அமையக்கூடாது என்பதிலேயே இபிஎஸ் குறியாக இருந்தார் என்றும், அவர் யாரையும் அரவணைத்து செல்லவில்லை என்றும் இன்று (மே 19) செய்தியாளர் சந்திப்பில் அவர் குற்றம் சாடியுள்ளார்.