போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப்

இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது.

இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் தனியாகக் கையாளப்படுவார்கள் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.