ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடியிடம், உலகப் பத்திரிகை சுதந்திர குறியீடு குறித்து அந்நாட்டு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றதும், அதற்கு பதிலளிக்காமல் பிரதமர் சென்றது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள நார்வேயில் உள்ள இந்திய தூதரகம், பிரதமரின் பயணம் தொடர்பாக தனியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்து செய்தியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளது.





