வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், NTA அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கூறினார். மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
