அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் விரிவான அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனிதத் துயரங்களைக் குறைக்கவும் பகைமை நிலையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.





