Thursday , December 13 2018
Home / Tamil Nadu News (page 4)

Tamil Nadu News

Tamil Nadu News

ஏழைகளுக்கு உதவிவந்த 515 கணேசனுக்கு நடந்த சோகம்..!

தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை… எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை.ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை …

Read More »

கணக்கு டீச்சரை கடத்திட்டு போன மர்ம நபர்கள்

கும்பகோணத்தில் கணக்கு டீச்சரை மர்ம அந்பர்கள் கடத்திக் கொண்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவர் கணக்கு டீச்சர் ஆவார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர் இருசக்கர வானத்தில் வீட்டிற்கு சென்ற காயத்ரியை காரில் வழிமறித்த கும்பல் அவரை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் காயத்ரியை கடத்திச் சென்றவர்களை தேடி வருகின்றனர். …

Read More »

மூளையில் கோளாறுள்ள கமல்ஹாசன்……

கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் வேகமக இல்லை என்று கூறிய கமல்ஹசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன. தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். அரசு …

Read More »

வெந்த புண்ணியில் வேலை பாய்ச்சும் பொன்னார்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டம் கடும் கண்டனத்திற்குரியது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது விவசாயிகளை கொந்தளிப்படையச் செய்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக …

Read More »

டிசம்பர் மாதம் ஆபத்து ஏதேனும் இருக்கா?

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் போக போக மழையை காணவில்லை. மழை இல்லாமல் இருந்த போதுதான் கஜா புயல் தாக்கியது, இந்த புயல் பாதிப்பில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதம் வந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் மழை எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அதன்படி, டிசம்பர் …

Read More »

என்ன ஆச்சு விஜயகாந்துக்கு? – ஏன் டெல்டா செல்லவில்லை?

டெல்டா பகுதிகள் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகராக இருந்த காலத்தில் இருந்தே மக்கள் பிரச்சனைகளில் உடனிடியாகக் களமிறங்கி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் அரசியலில் இறங்கிய பின்னர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிப்படையும் போது முதல் ஆளாக …

Read More »

சீமான் மீது போலீசில் புகார்

அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பாஜக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் …

Read More »

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை: கமல்ஹாசன்

மீ டூ புகார்

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை எவ்வாறு தடுப்பது மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, திராவிடர் …

Read More »

பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: வழிப்பறி, கொள்ளை வழக்கு பதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இண்டஹ் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …

Read More »