ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் தமது நாடு அதிக ஆர்வம் காட்டிவருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் Richard Marles தெரிவித்தார்.
உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க குறித்த நீரிணை கட்டாயம் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராக உள்ளது.
எனினும், பிராந்தியத்தில் நிலவும் போரில் ஒரு நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியா தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெளிவுபடுத்தியுள்ளார்.





